Homeசெய்திகள்இலங்கை செய்திகள்தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை!இறுதி தீர்மானம் எட்டப்படுமா?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை!இறுதி தீர்மானம் எட்டப்படுமா?

யுத்த காலப் பகுதியில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறை அடைக்கப்பட்டுள்ள சில அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு சாத்தியம் உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த விடயம் தொடர்பிலான இறுதி தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை என அறிய முடிகின்றது.

விடுவிக்கப்படுவதாக கூறப்படும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் இன்று மாலை வரை சிறைச்சாலை திணைக்களத்திற்கு கிடைக்கவில்லை என சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அநுராதபுரம் சிறைச்சாலையில் நாளை முற்பகல் 10 மணிக்கு விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரே இவ்வாறு விடுவிக்கப்பட சாத்தியங்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இதேவேளைஇ யுத்தக் காலத்தில் கைது செய்யப்பட்ட 17 தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாகவும், அது தொடர்பிலான இறுதி தீர்மானம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை எனவும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

Leave a comment