Homeசெய்திகள்உலக செய்திகள்ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக நைஜீரியாவில் பாடசாலைகள் மூடப்படுகின்றன.

ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக நைஜீரியாவில் பாடசாலைகள் மூடப்படுகின்றன.

ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக நைஜீரியாவில் பாடசாலைகள் மூடப்படுகின்றன.
 நைஜீரியாவில் ஆதிக்கம் போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்  . அத்துடன்பிற உள்ளூர் ஆயுதக் குழுக்களும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளும் ஆயுத குழுக்கள் பாடசாலை மாணவர்களை கடத்துவதுடன், கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளையும் திருடி வருகின்றனர்.
மேலும் ஆயுதக்குழுக்கள் பாடசாலை மாணவர்களை கடத்தி பிணைய கைதிகளாக வைத்துக் கொண்டு தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொள்கின்றன.
குறிப்பாக கடந்த சில மாதங்களாக நைஜீரியாவில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு புகுந்து மாணவர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தநிலையில் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கெப்பி மாகாணத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கூடங்களை மூட அந்நாட்டு மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்த மாகாணத்தில் தற்போது 7 பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
மாகாணம் முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னர் மேலும் பல பாடசாலைகள் மூடப்படும் என  ஆபிரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment