Homeசெய்திகள்இலங்கை செய்திகள்ஆடைத் தொழிற்சாலைகளில் கொவிட் கொத்தணி உருவாக வாய்ப்பு சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை!

ஆடைத் தொழிற்சாலைகளில் கொவிட் கொத்தணி உருவாக வாய்ப்பு சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை!

இயலுமான விரைவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆடைத் தொழிற்சாலைகளில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பாலான ஆடைத் தொழிற்சாலைகளில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், ஆடைத் தொழிற்சாலைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு இயலுமான விரைவில் கொவிட் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, புதிய கொவிட் வைரஸ் தாக்கத்தினால்இ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் டொக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளேயும் தெரிவித்துள்ளார்.

Leave a comment