Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் பெண் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தா? விசாரணை ஆரம்பம்!!

இலங்கையில் பெண் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தா? விசாரணை ஆரம்பம்!!

இலங்கையில் பெண் ஊடகவியலாளர்களில் பெருமளவானோர் துன்புறுத்தல்கள்களுக்கு உள்ளாவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்றைய அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
இலங்கையிலுள்ள பெண் ஊடகவியலாளர்களில் பெருமளவானோர் ஊடக நிறுவனங்களில் துன்புறுத்தல்கள்களுக்கு உள்ளாகுவது குறித்து இதுவரையில் எனக்கு உத்தியோகபூர்வமான முறைப்பாடுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.

முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமாயின் அவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என குறிப்பிட்டார்.

Leave a comment