Homeசெய்திகள்இலங்கை செய்திகள்நாட்டில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஆராயப்படும்!

நாட்டில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஆராயப்படும்!

நாட்டில் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழந்தை மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ தன்னார்வக் குழுவின் அறிக்கை உரிய நேரத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் கூறுகையில்,

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு சுமார் நான்கு வாரங்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியையாவது வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக மூன்று சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தேவையான ஆலோசனைகளை வழங்க மருத்துவ குழு முன்வந்து செயல்படுவதாகவும், அந்த வகையில் மருத்துவ வல்லுநர்கள் குழு தயாரித்த அறிக்கை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதை கல்வி அமைச்சரிடம் வழங்கிய பின்னர், ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து மேலும் விவாதிக்கலாம் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment