Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு நவீன கற்றல் நுட்பம்!

வவுனியாவில் கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு நவீன கற்றல் நுட்பம்!

வவுனியாவில் கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு நவீன கற்றல் நுட்பத்தை விரிவு படுத்தும் நோக்கில், முன்னாள் வவுனியா தெற்கு கல்வி வலய, கோட்டக்கல்வி பணிப்பாளர் கலாநிதி எம்.பி.நடராஜ் மற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.விஜியகாந்தன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வவுனியா சமணங்குளம் அ.த.க.பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களின் கட்டாய தேவைக்கேற்ப சூம் (ZOOM) முறையிலான கற்றல், கற்பித்தல் செயல் முறையை கிராமப்புற பாடசாலைகளில் “இற்றைப்படுத்தல்” என்ற சிந்தனையை வலுப்படுத்தும் நோக்கில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு ஸ்மாட் கைத்தொலைபேசிகளை இலவசமாக கற்றல் நடவடிக்கைக்கு வழங்கும் திட்டத்திற்கமைய முதற்கட்டமாக சமணங்குளம் பாடசாலையில் தரம் நாலு மற்றும் ஜந்தில் கல்வி கற்கும் 16 மாணவர்களுக்கு இலவசமாக (smart phone) கைத்தொலைபேசிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டு, மாணவர்களின் கல்விக்காக கைத்தொலைபேசிகளை (smart phone) பாடசாலையின் அதிபர் கோ.கனேஸ் மற்றும் ஆரம்பக்கல்வி ஆசிரியை திருமதி. பாலினி ஞானேஸ்வரன் ஆகியோர் வழங்கி வைத்ததுடன், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சூம் (ZOOM) செய்முறை தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நலன் விரும்பி திரு.ஜெயநாதனினால் 16 கைத்தொலைபேசிகளும் பாடசாலைக்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment