Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் இளைஞர்களால் கசிப்பு பெரல் கைப்பற்றப்பட்டு அழிப்பு!!

வவுனியாவில் இளைஞர்களால் கசிப்பு பெரல் கைப்பற்றப்பட்டு அழிப்பு!!

வவுனியாவில் இளைஞர்களால் கசிப்பு பெரல் கைப்பற்றப்பட்டு அழிப்பு!!

வவுனியா பாலமோட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்களால் கசிப்பு பெரல் ஒன்று கைப்பற்றபப்பட்டு அழிக்கப்ட்டுள்ளது.
பாலமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்குளம் கிராமத்தில் தொடர்ச்சியாக கசிப்பு விற்பனை நடைபெற்று வந்த நிலையில், பாலமோட்டை இளைஞர்கள் தங்கள் முயற்சியால் இன்று (யூன் 16) இரவு கசிப்பு பெரல் ஒன்றை கைப்பற்றி அழித்துள்ளனர்.

பனிச்சங்குளம் ஆத்துக்காணி என்ற பகுதியில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாரான நிலையில் வைக்கப்ட்டிருந்த ஒரு பெரல் ‘கோடா’ கிராமத்து இளைஞர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்த நபர்கள் கிராமத்து இளைஞர்களை பார்த்ததும் தங்கள் முயற்சியை கைவிட்டு தப்பி ஒடியதாக இளைஞர்கள் தெரிவித்தனர். அத்துடன் குறித்த நபர்கள் கைவிட்டு சென்ற ‘டோர்ச் லைட்’ ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பாலமோட்டை கிராம உத்தியோகத்தருக்கு தெரிவிக்கப்ட்டுள்ளதாகவும் கிராமத்து இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment