Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இணைய வழி மதுபான விநியோகம் ஒரு சூழ்ச்சி! அரச வைத்திய அதிகரிகள் சங்கம்!!

இணைய வழி மதுபான விநியோகம் ஒரு சூழ்ச்சி! அரச வைத்திய அதிகரிகள் சங்கம்!!

இணைய வழியாக வீடுகளுக்கு மதுபானங்களை விநியோகிக்கும் நடவடிக்கையானது, ஒரு சூழ்ச்சி என்பதனால் அதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மதுபான பயன்பாட்டினால் நாளொன்றிற்கு 63 பேர் வரை உயிரிழப்பதாகவும், கொரோனா மரணங்கள் நாளொன்றிற்கு சுமார் 60 வரை பதிவாவதாகவும் அந்த சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை உரிய முறை விநியோகிக்கும் வேலைத்திட்டமொன்று இல்லாத சூழ்நிலையில், மதுபான விநியோகம் தொடர்பில் இவ்வாறான தீர்மானமொன்று எட்டப்பட்டமையானது வெட்கப்பட வேண்டிய ஒரு விடயம் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இணைய வழியாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு, இலங்கை வைத்திய சங்கம் கடிதமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.

இணைய வழியாக மதுபான விற்பனை முன்னெடுக்கப்படும் பட்சத்தில், கொவிட் வைரஸ் தொற்றினால் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை மேலும் வலுப் பெறும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பிலான கலந்துரையாடல்களை நடத்துவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் டொக்டர் அநுரத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

Leave a comment