Homeசெய்திகள்இலங்கை செய்திகள்ரணிலை நோக்கி படையெடுக்கும் தொலைபேசி உறுப்பினர்கள்? எதிர்க்கட்சி தலைமை குழப்பத்தில்!!

ரணிலை நோக்கி படையெடுக்கும் தொலைபேசி உறுப்பினர்கள்? எதிர்க்கட்சி தலைமை குழப்பத்தில்!!

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய 16 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேற்று இணைந்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

கம்பளை நகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து உறுப்பினர்களும், கண்டி மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 உறுப்பினர்களும், உடபலாத பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கம்பளை நகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த அனைவரும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்து கொண்டுள்ளதாகவும்,

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்ட பெரும்பாலானோர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொள்வதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும்,  அந்த கோரிக்கைகள் குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பெருமளவிலான உறுப்பினர்களின் கட்சி தாவல் எதிர்க்கட்சி தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தம் என அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

Leave a comment