Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு முறைகேடாக நியமனம்! பிரதம செயலாளர் மீது குற்றச்சாட்டு!!

வவுனியாவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு முறைகேடாக நியமனம்! பிரதம செயலாளர் மீது குற்றச்சாட்டு!!

வவுனியாவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு முறைகேடாக நியமனம்! பிரதம செயலாளர் மீது குற்றச்சாட்டு!!

வவுனியாவில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில், வடக்கு மாகாண பிரதம செயலளரினால் முறைகேடான முறையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெருந்தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், பயணத்தடை காலத்தையும், தனிமைப்படுத்தல் சட்டத்தையும் பயன்படுத்தி முறையற்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தெழிலாளர்கள் சார்பாக, புதிய அரச பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
அரசாங்கத்தின் வர்த்தமானிக்கு அமைவாக உள்வாரியாகவும் சேவை மூப்படிப்படையிலும் அரசாங்கம் நிர்ணயித்த கல்வித்தகமையோடும் ஏனைய மாகாணங்களில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிக்கையில் வெளியிட்டதற்கமைவாக நியமனங்கள் வழங்கப்படும் பொழுது வடக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்ற தொழிலாளர்கள் மட்டும் உதாசினம் செய்யப்படுட்டுள்ளார்கள் என சுட்டிக்காட்டினர்.
பிரதம செயலாளர் முறைகேடான முறமைகளை பயன்படுத்தி நகரசபை, பிரதேசசபைகளில் உள்ள உள்ளக வெற்றிடங்களை சேவை மூப்பின் அடிப்படையில் வழங்காமலும், சபையின் தலைவர் உறுப்பினர்களுக்கு தெரியாமலும், உள்ளுராட்சி சபைகளில் அனுமதி பெறாமலும், நேர்முகத் தேர்வுகள் எவையும் நடைபெறாமலும், அரசாங்க சேவை ஆணைக்குழு சுற்றறிக்கை இல: 01ஃ2019 (1) எதனையும் கவனத்தில் கொள்ளாமலும் நியமனங்களை வழங்கி வருகின்றார், என்பதுடன் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்; இவைகளை தட்டி கேட்கக்கூடாது என்பதற்காக தொழிலாளர்களை கொரோனா காரணத்தை காட்டி தனிமைப்படுத்தி வைத்துள்ளார்கள் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சட்டரீதியாக தங்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும், என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.

 

 

;

Leave a comment