Homeசெய்திகள்இலங்கை செய்திகள்உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க கோரிக்கை!!

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க கோரிக்கை!!

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ .700 ஆக அதிகரிக்க நுகர்வோர் விவகார  அதிகாரசபையை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இதுவரை எந்த ஒப்புதலும் வழங்கப்படவில்லை என்றும், இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் அதிக எரிவாயு விலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைந்தது ரூ .580 ஆக உயர்த்த வேண்டும் என்று நாட்டின் முன்னணி எரிவாயு சில்லறை விற்பனையாளரான லிட்ரோ காஸ் நிறுவனம் கோரியுள்ளது.
 இதேவேளை  பாண்  தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

Leave a comment