Homeசெய்திகள்இலங்கை செய்திகள்BREAKING NEWS : எரிப்பொருளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் (புதிய விலை பட்டியல் இணைப்பு)

BREAKING NEWS : எரிப்பொருளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் (புதிய விலை பட்டியல் இணைப்பு)

லங்கா IOC நிறுவனமும் எரிப்பொருளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் (புதிய விலை பட்டியல் இணைப்பு)

சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விலை நேற்று (11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்திருக்கும் நிலையில், எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
லங்கா IOC நிறுவனமும் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
சிபேட்கோ நிறுவனத்தின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, தாமும் விலையை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய விலை பட்டியல்

ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை : 20 ரூபாவால் அதிகரிப்பு (157 ரூபா)
ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலின் விலை : 23 ரூபாவால் அதிகரிப்பு (184 ரூபா)
ஒரு லீற்றர் டீசல் : 07 ரூபாவால் அதிகரிப்பு (111 ரூபா)
ஒரு லீற்றர் சுப்பர் டீசல் : 12 ரூபாவால் அதிகரிப்பு (144 ரூபா)
ஒரு லீற்றர் மண்ணெண்ணை : 07 ரூபாவால் அதிகரிப்பு (77 ரூபா)

Leave a comment