Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வடக்கு கடலில் இன்று பழைய 30 பேரூந்துகள் இறக்கப்பட்டுள்ளது.!!

வடக்கு கடலில் இன்று பழைய 30 பேரூந்துகள் இறக்கப்பட்டுள்ளது.!!

வடக்கு கடலில் இன்று பழைய 30 பேரூந்துகள் இறக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் நீரியல் வளத்துறை  திணைக்களமும் கடற்றொழில் கூட்டுத் தாபனமும் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட கடல் எல்லைக்குள்  இ.போ.சபையினால் கை விடப்பட்ட 30 பேரூந்துகள்  கடலில் இறக்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மீன் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் கைவிடப்பட்ட பேரூந்துகளை கடலில் இறக்கும் திட்டம் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டம் இன்று காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இடம்பெறும் பணிக்காக கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்றொழில் கூட்டுத் தாபனத்தின்  உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். வருகை தந்த அதிகாரிகளின் முன்னிலையில்  பாவனையில் இருந்து கைவிடப்பட்ட பேரூந்துகள்  இதற்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்டு நேற்று மாலை கப்பலில் ஏற்றப்பட்டிருந்தது.

பேரூந்துகளை ஏற்றிய கப்பல் இலங்கை கடற்பரப்பின் எல்லைப் பகுதிகள் ஊடாக 5 மணி நேர பயணத்தில் இலங்கை எல்லைக்குள் இப் பேரூந்துகள் இன்று கடலில் இறக்கப்பட்டது.

இப் பணிக்காக எடுத்து வரப்பட்ட கைவிடப்பட்ட  பேரூந்துகளில்   மன்னார் போக்குவரத்துச் சாலைகளில் இருந்து 15 பேரூந்துகளும் யாழில் இருந்தும்  பேரூந்துகள்  எடுத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Leave a comment