Homeசெய்திகள்இலங்கை செய்திகள்BREAKING NEWS : பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு!!

BREAKING NEWS : பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு!!

நாடு முழுவதும் தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதும், பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா, இல்லையா என்பது பற்றிய தீர்மானம் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தீர்மானிக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

Leave a comment