Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வீரியம் கொண்ட கொவிட் அல்பா வைரஸ்!நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது!!

வீரியம் கொண்ட கொவிட் அல்பா வைரஸ்!நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது, பிரித்தானியாவில் பரவிய வீரியம் கொண்ட கொவிட் அல்பா வைரஸ்.
இந்த வைரஸ் ஆனது நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை வைத்திய பீடத்தின் பிரதானியும் வைத்தியருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட அல்பா, தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட பீடா மற்றும் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா ஆகிய மூன்று வகையான வைரஸ்களையே அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இரண்டு டெல்டா தொற்றாளர்களும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள்ளேயே அடையாளம் காணப்பட்டுள்ளமையால் நாட்டு மக்கள் அது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை,
எனினும் பிரித்தானியாவில் பரவிய அல்பா வைரஸ், நாட்டின் பல்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட் அல்பா வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துக்கொள்வது அவசியமானது எனவும்,
சுகாதார அமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் கடைபிடிப்பதன் ஊடாக, கொவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கொவிட் அல்பா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு, இலங்கையில் தற்போது செலுத்தப்படும் மூன்று வகையான தடுப்பூசிகளும் சிறந்த பயனை தரும் எனவும் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகளை செலுத்துவதன் ஊடாக, தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளைஇ வேறொரு நாட்டிலிருந்து இலங்கை ஊடாக பயணித்த ஒருவரினாலேயே அவுஸ்திரேலியாவில் கொவிட் டெல்டா வைரஸ் பரவியதாகவும்,
அதைவிடுத்து இலங்கையிலிருந்து சென்ற ஒருவரினால் இந்த வைரஸ் அவுஸ்திரேலியாவில் பரவவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்
இலங்கை ஊடாக பயணித்த குறித்த நபர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்குள் வருகைத் தர வில்லை, அதனால் நாட்டு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Leave a comment