Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியா அருட்பே சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது!!

வவுனியா அருட்பே சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது!!

 வவுனியா அருட்பே சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது!!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக வவுனியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவும் நோக்கோடு தெரிவு செய்யப்பட்ட சில இடங்களிற்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அந்த வகையில் இன்றைய தினம் (10.06.2021) வவுனியா பூவரசன்குளம் அருட்பே சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு சுமார் 30 உணவுப்பொதிகள் பிரபல தொழிலதிபர் ஜமால்தீன் ஹசன் மற்றும் முன்னாள் செட்டிக்குள மரண விசாரணை அதிகாரி கலாநிதி Dr. சாகுல் ஹமீது அவர்களின் ஏற்பாட்டின் கீழ் குறித்த உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட SSP திஸ்ஸ லால் டீ சில்வா மற்றும் செட்டிக்குளம், பூவசரசன்குளம், உலுக்குளம், பரயநாயன்குளம் ஆகியவற்றின் பொறுப்பதிகாரி, SSP ஜெகத் வீரக்கோன் மற்றும் பூவரசன்குளம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய, செட்டிக்குளம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி U.ரத்ன மலல ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது 30 பேரிற்க்கான உலர் உணவுப் பொதிகள் பூவரசன்குளம் அருட்பே சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு பொறுப்பான சிஸ்டர் பற்றீசியா ராஜேஷ் மற்றும் சிஸ்டர் கௌசலா அவர்களிடத்தில் கையளிக்கப்பட்டன.

Leave a comment