Homeசெய்திகள்இலங்கை செய்திகள்மன்னார் மிகக்குறைவான கொவிட் தொற்றாளர்கள் உள்ள மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது!

மன்னார் மிகக்குறைவான கொவிட் தொற்றாளர்கள் உள்ள மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது!

மன்னார் மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் 1000திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதாரப்பிரிவு அறிவித்துள்ளது.

ஆயிரத்திற்கும், குறைவான கொவிட் தொற்றாளர்கள் காணப்பட்ட வவுனியா மாவட்டமும், நேற்றைய தினத்துடன் 1000 தொற்றாளர்களை கடந்துள்ளது என வவுனியா மாவட்ட சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், மன்னார் மாவட்டத்தில் இதுவரை 672 தொற்றாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மாவட்ட ரீதியாக காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை பட்டியலை கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது.

 

Leave a comment