Homeசெய்திகள்இலங்கை செய்திகள்மதகுருமார்களின் குடும்பத்திற்கு ரூபா 5000 /=   கொடுப்பனவு!!

மதகுருமார்களின் குடும்பத்திற்கு ரூபா 5000 /=   கொடுப்பனவு!!

கோவிட் – 19 பேரிடர் நிலைமை காரணமாக  பாதிக்கப்பட்ட இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதகுருமார்களின் குடும்பத்திற்கு ரூபா 5000 /=   கொடுப்பனவொன்றைச் செலுத்துதல்
கோவிட் – 19 பேரிடர் நிலைமையின் மூன்றாவது பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட் குடும்பங்களிற்கு ரூபா 5000 /=  கொடுப்பனவு வழங்கல் தொடர்பான தங்களது PTF/03-2021(i)  இலக்க 2021.05.31 ஆந் திகதிய சுற்றறிக்கை தொடர்பாக
ii) கௌரவ பிரதம மந்திரி அவர்களின் அறிவுறுத்தலிற்கு அமைவாக கொவிட் – 19 பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மதகுருமாருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பௌத்த விகாரைகளில் உள்ள பிக்குமார் மற்றும் கத்தோலிக்க ஆலயங்களில் வசிக்கும் மதகுருமாரிற்கு உலர் உணவுப் பொதிகள் சதோசா ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் – 19 பேரிடர் காரணமாக வாழ்வாதாரம் பாதிப்புற்ற இந்துஇ இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத தலங்களில் சேவையாற்றும் மதகுருமார்களும் மற்றும் அரபுக்கல்லூரிகளில் பணிபுரியும் முஸ்லீம் மதகுருமார்களும் தங்களது குடும்பத்தையும்  பராமரித்துக் கொள்ள வேண்டியுள்ளதால்; இவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்
iii) இக் குடும்பங்களில் சிலர் ஏற்கனவே சமுர்த்திக் கொடுப்பனவை பெறுகின்றார்கள் என்பதுடன் அவற்றைப் பெறாத பாதிக்கப்பட்ட மதகுருமார்களின் குடும்பங்களிற்கு மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திக் கீழ் கோவிட் – 19 பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு வழங்கும் ரூபா 5000/= கொடுப்பனவை வழங்கவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அந்த வகையில் மேற்குறித்த சுற்றறிக்கையினை மாற்றியமைத்து அனுப்பமாறும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
தேசபந்து பேராசிரியர் கபில குணவர்தன
செயலாளர்
புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
பிரதிகள்
1. ஜனாதிபதியின் செயலாளர்
2. செயலாளர் நிதி அமைச்சு
3. செயலாளர் அரசாங்க சேவைகள் மாகாண சேவைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு
4. செயலாளர் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு
5. செயலாளர்இ சமுர்த்தி வதிவிடப் பொருளாதார நுண்நிதிய சுயதொழில் வணிக அலுவல்கள் இராஜாங்க அமைச்சு
6. பணிப்பாளர் இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு
7. பணிப்பாளர் முஸ்லீம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சு
8. பணிப்பாளர் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு

Leave a comment