Homeசெய்திகள்இலங்கை செய்திகள்நாட்டில் பாடசாலைகள் மீண்டும் நான்கு கட்டங்களாக திறக்கப்படவுள்ளன என்ற செய்தி போலியானது! கல்வி அமைச்சின் செயலாளர்!!

நாட்டில் பாடசாலைகள் மீண்டும் நான்கு கட்டங்களாக திறக்கப்படவுள்ளன என்ற செய்தி போலியானது! கல்வி அமைச்சின் செயலாளர்!!

நாட்டில் பாடசாலைகள் மீண்டும் நான்கு கட்டங்களாக திறக்கப்படவுள்ளன என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி போலியான செய்தி எனத் தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, இதுபோன்ற எந்த அறிவிப்பும் அமைச்சால் வெளியிடப்படவில்லை எனவும் கூறினார்.
கல்வி அமைச்சை மேற்கோள் காட்டி இதுபோன்ற போலிச் செய்திகளைப் பரப்புவது முறையானதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“நாட்டில் மோசமான ஒரு தொற்றுநோய் நிலைமை பரவலாக இருக்கும் சூழ்நிலையில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல. எனவே, கல்வி அமைச்சால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ செய்திகளை மாத்திரம் நம்ப வேண்டும்.
இதுபோன்ற போலிச் செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியவர்கள் மீது பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்படும்” என குறிப்பிட்டார்.

Leave a comment