Homeசெய்திகள்இலங்கை செய்திகள்ஓமந்தை மத்திய கல்லூரியில் பல்கலை அனுமதி பதிவுகளை மேற்கொள்ள முடியும்! அதிபர்!!

ஓமந்தை மத்திய கல்லூரியில் பல்கலை அனுமதி பதிவுகளை மேற்கொள்ள முடியும்! அதிபர்!!

ஓமந்தை மத்திய கல்லூரியில் பல்கலை அனுமதி பதிவுகளை மேற்கொள்ள முடியும்! அதிபர்!!

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில், பல்கலைக்கழகத்திற்கான அனுமதி பதிவுகளை மாணவர்கள், மேற்கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் க.தனபாலசிங்கம் இன்று (யூன் 03) தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு 2020-2021 கல்வியாண்டுக்கான தகுதி பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவுகளை வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் எதிர்வரும் யூன் 07 ஆம் திகதி காலை 8.00 மணிதொடக்கம் மேற்கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உட்பட, அயல் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் தங்கள் பல்கலைக்கழகத்திற்கான பதிவுகளை செய்துகொள்ள முடியும் என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான மாணவர்களை பதிவு செய்யும் செயற்பாட்டிற்காக, மூன்று தொழில்நுட்ப ஆசிரியர்கள் எதிர்வரும் (07-06-2021) அன்று நியமிக்கப்பட்டுள்ளனர் என அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a comment