Homeசெய்திகள்இலங்கை செய்திகள்யாழ்ப்பாணம் கடற்கரையோரப் பிரதேசத்தில் பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் மீட்பு!!

யாழ்ப்பாணம் கடற்கரையோரப் பிரதேசத்தில் பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் மீட்பு!!

யாழ்ப்பாணம் – மாதகல் மாசன்குடா கடற்கரையோரப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 101 கிலோ 700 கிராம் எடைகொண்ட கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதனுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இந்த கேரள கஞ்சா கடத்திவர பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகையும் இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
சூட்சுமமான முறையில் படகில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு பொதிகளில் இந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 30 மில்லியன் (03 கோடி) ரூபா என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 04 நாட்களில் வடக்கு மாகாண கரையோரப் பிரதேசங்களில் வைத்து இதுவரை 63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிகொண்ட 212 கிலோ 235 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment