Homeவிவசாயம்இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது! அரசாங்கம் திட்டவட்டம்!!

இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது! அரசாங்கம் திட்டவட்டம்!!

பசுமை பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி பாவனையயும் இறக்குமதியையும் தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் பின்னர், ஒருசில உர வர்த்தகர்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள இரசாயன உரங்களை பதுக்கி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு பதுக்கி வைத்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது, அதனால் உரத்தை பதுக்கி வைப்பதனால் பயனில்லை.
எனவே பதுக்கி வைத்துள்ள உரங்களை மொத்த விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்குமாறு உர வர்த்தகர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a comment