Homeசெய்திகள்இலங்கை செய்திகள்நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1000 திற்கும் அதிகமானோர் கைது!!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1000 திற்கும் அதிகமானோர் கைது!!

நாடு பூராகவும் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1.047 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம் அமல்படுத்தப்பட்ட காலம் முதல் இதுவரையான காலம் வரை நாளொன்றில் கைதான அதிகளவானோர் நேற்றைய தினமே கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்

மாத்தளையில் 160 பேரும், நிகவரெட்டி பகுதியில் 119 பேரும், கண்டியில் 98 பேரும் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

நாடு பூராகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19.102 பேர் இதுவரை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment