Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியா சுயாதீன இளைஞர் அமைப்பினரால் புத்தகம் பகிர்தல் செயற்பாடு!!

வவுனியா சுயாதீன இளைஞர் அமைப்பினரால் புத்தகம் பகிர்தல் செயற்பாடு!!

வவுனியா சுயாதீன இளைஞர் அமைப்பினரால் புத்தகம் பகிர்தல் செயற்பாடு 29-05-2021 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுந்தரபுரம் வீதிக்கரையோரங்களில் கடந்த ஆறு மாதங்களாக மரக்கன்றுகளை பராமரித்து வரும் குடும்பங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வழங்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் எதிர்காலத்தில் அயலவர்களுக்கு  மாற்றீடு  செய்யப்பட வேண்டும் என்பதுடன், கொரோனா பெருந்தொற்று காரணமாக பயணத்தடை நடைமுறையில் இருக்கும் இக்காலத்தில் மாணவர்களும், வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களும் புத்தகங்களை வாசிப்பதன் ஊடாக இக்காலப்பகுதியை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள முடியும், என்பதும் இச்செயற்பாட்டின் நோக்கமாகும் என சுயாதீன இளைஞர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இயற்கையை நேசித்து, மரங்களை வளர்ப்பதோடு, புத்தகங்களை ஆர்வமுள்ள புதிய வாசகர்களுக்கு அறிமுகம் செய்தல் என்பதும் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

புதிதாக புத்தகங்களை அன்பளிப்பு செய்ய நினைப்பவர்கள் சுயாதீன இளைஞர் அமைப்பை தொடர்பு கொண்டு அன்பளிப்பு செய்ய முடியும் எனவும் மேலும்தெரிவித்தனர்.

Leave a comment