Homeசெய்திகள்இலங்கை செய்திகள்பயணக் கட்டுப்பாடுகளை மீறி, பயணித்த பேருந்து பொலிசாரினால் தடுத்து வைப்பு!

பயணக் கட்டுப்பாடுகளை மீறி, பயணித்த பேருந்து பொலிசாரினால் தடுத்து வைப்பு!

பயணக் கட்டுப்பாடுகளை மீறி, அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று  நேற்றிரவு (30) பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இங்கினியாகல, நாமல்ஓயாவில் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்ட்ட பேருந்தானது பயணக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி பயணித்திருந்தது கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக குறித்த பேருந்தின், சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொலிசாரினால் கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று (31) அம்பாறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் என பிரதி பொலிஸ் மா அதிபரும், பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Leave a comment