Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் (26-05-2021) வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு, கிராம அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக, நெடுங்கேணி பிரதேச செயலாளரின் உத்தரவுக்கு அமைய, கிராம உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட 115 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவக்குட்பட்ட ஒலுமடு, பட்டிகுடியிருப்பு, காஞ்சிராமோட்டை ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a comment