Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு கால எல்லை நீடிப்பு!!

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு கால எல்லை நீடிப்பு!!

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு கால எல்லை நீடிப்பு!!
மே 15 வரை செயலிலுள்ள, செயலில் இல்லாத சகல கடன் வசதிகளுக்கும் ஆகஸ்ட் 31 வரை மீளச் செலுத்தும் நிவாரண காலம்.
இவ்வாறான நிவாரண காலப்பகுதிக்கு அறவிடப்படும் வருட வட்டி 6.18%.
இந்தச் சலுகையினூடாக ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை நிலுவைக் காலம் நீடிக்கப்படும் வசதிகளில் தொழிற்படு மூலதனம், அடகு, தற்காலிக மேலதிகப் பற்றுகள், குறுங்கால நிதி வசதிகள் போன்றனவும் அடக்கம்.
மே 15 முதல் ஆகஸ்ட் 31 வரையான நிவாரண காலப்பகுதிக்கு தண்ட வட்டி அறவீடு மேற்கொள்ளப்படக்கூடாது.
இந்த நிவாரண வசதியை வழங்குவதற்காக வங்கிகளால் மேலதிக கட்டணங்களை அறவிட முடியாது.
ரூ. 500,000க்கு குறைந்த பெறுமதியான காசோலைகளின் செல்லுபடியாகும் காலம் ஜுன் 30 ஆம் திகதி வரை நீடிப்பு.
காசோலை மீளத் திரும்பல்கள் மற்றும் காசோலை கொடுப்பனவுகளுடன் தொடர்புடைய சகல அறவீடுகளையும் ஜுன் 30 ஆம் திகதி வரை நிறுத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தல்.
கடன் அட்டைகள் மற்றும் இதர கடன் வசதிகள் மீதான காலம் தாழ்த்திய கொடுப்பனவுக் கட்டணத்தை ஜுன் 30 ஆம் திகதி வரை அறவிடுவதை நிறுத்துவதுடன், முற்கூட்டியே செலுத்தித் தீர்ப்பதற்கான கட்டண அறவீட்டை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல்.
ஜுன் மாதம் 21ஆம் திகதி வரை புதிய நிவாரணத்துக்கு தகைமை வாய்ந்த வாடிக்கையாளர்கள் கோரலாம்.
ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் மீளச் செலுத்தல் சலுகைகளை தற்போது அனுபவிக்கும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய நிவாரணச் சலுகைக்கு தகைமை பெறமாட்டார்கள்.
தொடர்ந்தும் தமது கடன் பெறுகைகளுக்கான மீளச் செலுத்தல்களை மேற்கொள்ளக்கூடியவர்கள், தொடர்ந்து மீளச் செலுத்துமாறும் அறிவுறுத்தல்.

Leave a comment