Homeசெய்திகள்இலங்கை செய்திகள்முல்லைத்தீவில் சட்டவிரோத மணல் கொள்ளை! போலிசார் கண்டுகொள்வதில்லை!

முல்லைத்தீவில் சட்டவிரோத மணல் கொள்ளை! போலிசார் கண்டுகொள்வதில்லை!

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை! போலிசார் கண்டுகொள்வதில்லை! மக்கள் விசனம்!!


முல்லைத்தீவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்ட போதும் பொலிசார் கண்டு கொள்வதில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்.


முல்லைத்தீவு உப்புமாவெளி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு காரணமாக வீதிகள் மற்றும் வீடுகள் பாதிப்புக்கு உள்ளாவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையில், இதனை தட்டி கேட்கும் மக்களை சட்டவிரோத மணல் கொள்ளையர்கள் அச்சுறுத்தி வருவதாக கிராமவாசிகள் குறிப்பிட்டனர்.


மணல் கொள்ளை மாபியாக்கள் குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டவுடன், மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் மணல் கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாக கிராமவாசிகள் அச்சம் வெளியிட்டனர்.

 

 

Leave a comment