Homeசெய்திகள்இலங்கை செய்திகள்புதுக்குடியிருப்பில் நான்கு கர்ப்பிணிகள் உட்பட 365 பேருக்கு கொரோனா!!

புதுக்குடியிருப்பில் நான்கு கர்ப்பிணிகள் உட்பட 365 பேருக்கு கொரோனா!!

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலைக் கொரோனாக் கொத்தணியில் கர்ப்பிணித் தாய்மார் நால்வர் உட்பட 365 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஆயிரத்து 424 பேரில் 365 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 4 பேர் கர்ப்பிணித் தாய்மார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் கொரோனா இடைத்தங்கல் நிலையத்திலும், இருவர் மாங்குளம் மருத்துவமனையிலும், ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 9 மாதங்கள் நிரம்பிய கர்ப்பிணித் தாய் ஒருவர் மருத்துவமனைக்கு நீண்ட இழுபறியின் பின்னரே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவர் வசிக்கும் இடம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு வாகன வசதிகள் எதுவும் இல்லாமல் திண்டாடிய நிலையில் நேற்றுக் காலை 5 மணிக்கே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment