Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையை தாக்கியது கரும்பூஞ்சை எனும் கண் கிருமி தொற்று!!

இலங்கையை தாக்கியது கரும்பூஞ்சை எனும் கண் கிருமி தொற்று!!

கருப்பு பூஞ்சை` தொற்று என்று கூறப்படும் அரிய வகை மியுகோர்மைகோசிஸ் தொற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொவிட்-19  பரவலுடன் பரவும் கருப்பு பூஞ்சை எனப்படும் கிருமி தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் ; இலங்கையின் அம்பாறை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக , அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்டீராய்டுகளால் இந்த தொற்று தூண்டப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கரும்பூஞ்சை நோயானது முழுமையாக குணப்படுத்தக்கூடியதுதான். இதனால் தேவையற்ற பயமோ, பதற்றமோ வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment