Homeசெய்திகள்இலங்கை செய்திகள்கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கா 22 ஆயிரம் பொலிஸார்! வெளியேறுவதற்கு அனுமதி இல்லை!!

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கா 22 ஆயிரம் பொலிஸார்! வெளியேறுவதற்கு அனுமதி இல்லை!!

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுக்காடு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கா சுமார் 22 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இக்காலப் பகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பயன்படுத்தி வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது.

இருப்பினும் அத்தியாசிய தேவைகளை முன்னெடுப்பதற்கும் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி உண்டு.

Leave a comment