Homeசெய்திகள்இலங்கை செய்திகள்கொரோனா தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது!!

கொரோனா தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது!!

கொரோனா தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது . இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி முன்வைத்தார் .

விசேட அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அரசு மருந்தாக்க கூட்டுத்தாபனமும் , சிநோவெக் பயோடெக் மற்றும் கெலுன் லைஃப் சயன்ஸ் தனியார் கம்பெனியும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் சகலருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அடிப்படையாக கொண்டே மேற்படி திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment