Homeசெய்திகள்விளையாட்டு வீரர்கள் தங்களது கழகத்தின் ஊடாக அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள வேண்டும்

விளையாட்டு வீரர்கள் தங்களது கழகத்தின் ஊடாக அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள வேண்டும்

தற்சமயம் காணப்படும் நாட்டினுடைய தொற்று நோய் காரணமாக இலங்கை  விளையாட்டு திணைக்களத்தினுடைய போட்டிகள்மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான எதிர் கால திட்டங்கள், சுற்றுநிருபங்கள் விளையாட்டு திணைக்களத்தினால் முன்வைக்கப் பட்டுள்ளது.
அந்த வகையில் முழு தொடுகை விளையாட்டுகளான ( வூசு, குத்துச்சண்டை, யூடோ, மல்யுத்தம், கராத்தே, தைக்கொண்டோ, சுமோ) போன்ற விளையாட்டுகளை எதிர் வரும் காலங்களில் நடத்துவதற்கும் சுகாதார நடைமுறைக்கிணங்க விளையாட்டு வீரர் களை மாத்திரம் நிகழ்வுகளில் பங்கு கொள்ள வைத்து ஏனையவர்களை தவிர்ப்பதற்காகவும்.
வீர, வீராங்கனைகள் தற்சமயமுள்ள இன்னலான நிலையிலும் சுகாதார நடைமுறைக் கிணங்கப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான ஏற்ப்பாடுகளை செய்வதற்கும் அனைத்து கழகங்கள்/ அமைப்பை சேர்ந்த விளையாட்டு வீரர்களும் தங்களது கழகத்தின்/அமைப்பின் ஊடாக அடையாள அட்டையினை பெற்றுக் கொள்வதென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அடையாள அட்டை இல்லாதவர்கள் போட்டிகளில் பங்கு கொள்ள முடியாது என்னது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் அனைத்து வீர ,வீராங்கனைகளும், பயிற்றுனர்கள், நிர்வாக உறுப்பினர்களுட்பட தங்களுக்கான அடையாள அட்டை யினை கழகம்/  அமைப்பின் ஊடாக விளையாட்டு உத்தியோகத்தர்/மாகாண விளையாட்டு பணிப்பாளரின் சிபாரிசு டன் பெற்றுக் கொள்ளுங்கள்
 மேற்படி விடயம் தொடர்பாக அடையாள அட்டை யினை பெற்றுக் கொள்ளும் அனைவரும் வட மாகாண ஏழாம் அறிவு தற்காப்பு கலை அமைப்பின் உறுப்பினராக இருக்க வேண்டும்
வடமாகாணத்திலுள்ள 05 மாவட்டங்களில் நிரந்தர வதிவிடமாக இருத்தல் வேண்டும்.
வடமாகாண ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் அடையாள அட்டை யினை பெற்றுக் கொள்ள தேவையான ஆவணங்கள்
1 – முத்திரை அளவு நீல நிற பின்புறம் கொண்ட வர்ண புகைப்படம்-04
2- பிறப்பு சான்றிதழ் பிரதி
3- தேசிய அடையாள அட்டை பிரதி
4- அமைப்பிற்கான அங்கத்துவ கட்டணம் + அடையாள அட்டை க்கான அச்சிடும் பணம் + அரச வரிகள்  அடங்கலாக 2000 ரூபாய்.

Leave a comment