Homeசெய்திகள்இலங்கை செய்திகள்ரிஷாட் தரப்பு 500 கோடி ரூபா நட்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!

ரிஷாட் தரப்பு 500 கோடி ரூபா நட்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை விடுவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று  (19)  அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரியாஜ் பதியுதீனின் கைது சட்டவிரோதமானது எனவும் அதற்கு 500 கோடி ரூபா நட்டஈடு கோரியும் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவருடைய தம்பி ரியாஜ் பதியுதீன் ஆகியோருக்கு,ஈஸ்ரர் தாக்குலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என தெரிவித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment