Homeசெய்திகள்இந்திய செய்திகள்பேரறிவாளனின் பரோல் மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு-உயர் நீதிமன்றம்!!

பேரறிவாளனின் பரோல் மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு-உயர் நீதிமன்றம்!!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனின் பரோலை மேலும் இருவாரங்கள் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பேரறிவாளனை 30 நாட்களில் பரோலில் விடுவிக்க அனுமதி அளித்தது. இதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், பேரறிவாளனின் ஒரு மாத பரோல் காலம் வரும் 9 ஆம் தேதியோடு முடிவடைவதால், மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செயதிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளதால் மேலும் 30 நாட்களுக்கு பரோலை நீட்டக்கக் கோரி அற்புதம்மாள் தரப்பில் வாதிடப்பட்டது.இதனை பரிசீலித்த நீதிபதிகள் வரும் 23-ஆம் தேதிவரை 2 வார காலம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டனர்.

 

Leave a comment