HomeUncategorizedகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது,89, மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!!

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது,89, மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!!

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இன்று(20/05) நாடாளுமன்றத்தில் 89, மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 148, வாக்குகளும் எதிராக
59, வாக்குகளும் அளிக்கப்பட்டன.
சீனாவின் முதலீட்டுத் திட்டமான கொழும்புத் துறைமுக நகரை, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் தனி ஆணைக்குழுவின் கீழ் நிருவகிக்கப்பதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்திருந்தது.

தேசிய துறைமுக சபையின் 1978, 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டம், மாநகர சபைக் கட்டளைச் சட்டம், இலங்கை வணிக மத்தியஸ்த சட்டம், நகர மற்றும் கிராமிய கட்டளைச் சட்டம், மூலோபாய அபிவிருத்தித் திட்டச் சட்டம், பொது ஒப்பந்த உடன்படிக்கைச் சட்டம் மற்றும் இலங்கை முதலீட்டு சபைச் சட்டம் ஆகியன இதில் அடங்குகின்றன.

உள்நாட்டு இறைவரிச் சட்டம், பெறுமதி சேர் வரிச் சட்டம், 2002 மற்றும் 2005இல் நிறைவேற்றப்பட்ட நிதிச் சட்டம், கலால் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், சுங்க கட்டளைச் சட்டம், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரிச் சட்டம் ஆகியன மூலம், கொழும்பு துறைமுக நகரை விடுவிப்பதற்கு அல்லது ஊக்குவிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி வரிச் சட்டம், பந்தயம் மற்றும் கலால் சட்டம், தொழிலாளர்களின் வேலையை நிறுத்துவது தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம், களியாட்ட வரிச் சட்டம், அந்நியச் செலாவணி மற்றும் கெசினோ வர்த்தக ஒழுங்குபடுத்தல் சட்டம் ஆகியவற்றிலிருந்தும் இந்த வலயத்தை விடுவிப்பதற்கு அல்லது ஊக்குவிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்திற்குள் மூலோபாய முக்கியத்துமுள்ள வர்த்தக நடவடிக்கைளுக்கு, நாற்பது வருடங்களுக்கு வரியிலிருந்து விடுவித்தல், ஊக்குவித்தலுக்கும் பிரேரணையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பான வாத விவாதங்கள் நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் இடம் பெற்று வந்த நிலையில், இன்று(20/05) மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்
பட்டுள்ளது.

Leave a comment