Homeசெய்திகள்இலங்கை செய்திகள்கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி!!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி!!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த தகவல்கள் தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் திணைக்களத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இருந்தபோதும், கிளிநொச்சியில் அமைந்தள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளையும் உடனடியாக மூட வேண்டும் என்று பொது அமைப்புக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21  எண்ணிக்கையுடன், கடந்த 24 மணி நேரங்களில் வடக்கில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment