Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் அடுத்த வரும் 100 நாட்களில் நோயாளர் தொகை 10 இலட்சமாக அதிகரிக்கும் ஆபத்து!!

இலங்கையில் அடுத்த வரும் 100 நாட்களில் நோயாளர் தொகை 10 இலட்சமாக அதிகரிக்கும் ஆபத்து!!

இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோண தொற்று அடுத்த வரும் 100 நாட்களில் நோயாளர் தொகை 10 இலட்சமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர்  ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிவருவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், சாதாரண கணக்கெடுப்பின் படி ஐந்து, ஆறு தினங்களுக்கிடையே ஒரு நபர் இரண்டு நபர்களுக்கு தொற்றை ஏற்படுத்துவாராயின், ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு ஒரு முறையும் நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகும், எனவே  எதிர்வரும் 100 நாட்களில் தொற்றாளர்கள் பத்து இலட்சமாக அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்  ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

அந்தவகையில் இன்றளவும் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களளின் எண்ணிக்கை 150771 அக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment