Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பொலிசார்!!

வவுனியாவில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பொலிசார்!!

வவுனியாவில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பொலிசார்!!

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் ஆத்ம சாந்தி பூஜை நிகழ்விற்கு செய்தி செகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை பொலிசார் அச்சறுத்திய சம்பவம் இன்று (18) இடம்பெற்றது.
முள்ளிவாய்க்காலில் மரிணித்த மக்களின் ஆத்மசாந்தி பூஜை வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை, ஊடகவியலாளர் என பொலிசாருக்கு தெரிவித்தபோதும் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறி பொலிசார் அச்சுறுத்தியுள்ளனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் ஊடகவியலாளர்களுடன் மல்லுக்கட்டியதுடன், அச்;சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டனர்.
ஊடகவியலாளர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை பொலிசாருக்கு காண்பித்த போதிலும், அதனை தவிர்த்துவிட்டு தேசிய அடையாள அட்டையை காண்பிக்குமாறு அச்சுறுத்தினர்.
பின்னர் தேசிய அடையாள அட்டையின் பிரகாரமே வெளியில் வரமுடியும் என்றும் அனைவருக்கும் ஒரே நடைமுறையே என்றும் கடுமையாக அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்தனர்.
எனினும் இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் தகவல் திணைக்களம் ஆகியன ஊடகவியலாளர்கள், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நேரங்களில் செய்தியினை சேகரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிசாருக்கு தெரியப்படுத்திய போதும், பொலிசார் அதனை ஏற்க மறுத்தனர்.
தற்போது தேசிய அடையாள அட்டை இலக்க முறைமை நடைமுறையில் உள்ள போதும், கடமைக்கு செல்லும் ஊழியர், உத்தியோகத்தர் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு உள்ளது என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், குறித்த நடைமுறை தொடர்பாக கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள் பொலிசாரால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டனர்.

Leave a comment