Homeசெய்திகள்இலங்கை செய்திகள்அடையாள அட்டை எண் நடைமுறை அமுல்! பிரதி பொலிஸ் மா அதிபர்!!

அடையாள அட்டை எண் நடைமுறை அமுல்! பிரதி பொலிஸ் மா அதிபர்!!

நாடு பூராவும் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இதை தெரிவித்தார்.
இதற்கிடையில், போக்குவரத்து கட்டுப்பாடுகள் இன்றும் நடைமுறையில் தொடர்ந்து உள்ளன.

எனினும் இன்று தேசிய அடையாள அட்டை எண் முறையைப் பயன்படுத்தவோ, அல்லது வீட்டை விட்டு வெளியேறவோ வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நாளை (17) அதிகாலை 4 மணி முதல் அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை அடையாள அட்டையின் எண் முறையின்படி வீட்டை விட்டு வெளியேற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

Leave a comment