Homeசெய்திகள்இலங்கை செய்திகள்திருமணத்தை நடாத்த முடியும், நிகழ்வுகளாக முடியாது! பொலிசார் எச்சரிக்கை!!

திருமணத்தை நடாத்த முடியும், நிகழ்வுகளாக முடியாது! பொலிசார் எச்சரிக்கை!!

இலங்கையயில் 13-05-2021 தினம் முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளவர்கள், தமது வீடுகளிலேயே பதிவு திருமணத்தை செய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமது பெற்றோர்இ திருமண பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சியாளர்களுடன், திருமண தம்பதியினர் பதிவு திருமணத்தை செய்துக்கொள்ள முடியும் என அவர் கூறுகின்றார்.

எனினும் இந்த திருமண நிகழ்வு, முழுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றிய விதத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

குறித்த பகுதியிலுள்ள சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய, திருமண நிகழ்வு நடைபெறும் வீட்டிலேயே குறித்த திருமண நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.
இருந்தபோதும் திருமணத்தை நிகழ்வாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment