Homeசெய்திகள்இலங்கை செய்திகள்தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை! ஆறு வருட சிறைத்தண்டணை விதிக்கப்படலாம்!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை! ஆறு வருட சிறைத்தண்டணை விதிக்கப்படலாம்!

இலங்கை முழுவதும் நேற்று (13) இரவு 11 மணி தொடக்கம் இறுக்கமான பயண கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ள நிலையில்,
கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து சட்டங்களை மீறுபவர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தனிமைப்படுத்தல் அல்லது போக்குவரத்துக் கட்டுப்பாடுகளின் மீறல்களை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கும்படி பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Leave a comment