Homeசெய்திகள்இலங்கை செய்திகள்அடையாள அட்டை நடைமுறையை மீறினால் − கைது செய்யப்படுவார்கள்!!

அடையாள அட்டை நடைமுறையை மீறினால் − கைது செய்யப்படுவார்கள்!!

இலங்கையில் எதிர்வரும் 17ம் திகதிக்கு பின்னர், தேசிய அடையாள அட்டை நடைமுறையை மீறி செயற்படும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
வீடுகளை விட்டு மக்கள் வெளியேறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுமாறு அவர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய அடையாளஅட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றையேனும் கொண்டு செல்லுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொருட்களை கொள்வனவு செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அடையாள அட்டை இலக்கங்களின் பிரகாரம் மாத்திரமேஇ எதிர்வரும் 17ம் திகதி முதல் வெளியில் வர முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாக (1,3,5,7,9) இருக்கும் பட்சத்தில்இ ஒற்றை இலக்கத்தை கொண்ட திகதிகளில் மாத்திரமே அவர்களினால் வெளியில் வர முடியும் என அவர் கூறுகின்றார்.
அதேபோன்று, தேசிய அடையாளஅட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றின் இறுதி இலக்கம் இரட்டை இலக்கமாக (2,4,6,8,0) இருக்கும் பட்சத்தில், இரட்டை இலக்கத்தை கொண்ட திகதிகளில் மாத்திரமே அவர்களினால் வெளியில் வர முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அனைத்து இலங்கை பிரஜைகளும் கட்டாயம் தேசிய அடையாளஅட்டையை பயன்படுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
தேசிய அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், கிராம உத்தியோகத்தரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட ஆவணமொன்றை பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, கடமைகளுக்கு எவரேனும் ஒருவர் செல்வாராயின், அடையாள அட்டை நடைமுறை அவர்களுக்கு செலுப்படியாகாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
இந்த நடவடிக்கை 17ம் திகதி முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அவர் கூறுகின்றார்.

Leave a comment