Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையர்களுக்கு, மலேசியா பயணத்தடை!!

இலங்கையர்களுக்கு, மலேசியா பயணத்தடை!!

மலேசியாவிற்குள் இலங்கையர்கள் பிரவேசிக்க அந்த நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலேயே, அந்த நாட்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதேவேளை, பங்களதேஷ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் மலேசியாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்குள் பிரவேசிக்க ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து தமது நாட்டிற்கு வருகைத் தர அந் நாடு தடை விதித்துள்ளது.
மலேசியாவில் நாளொன்றில் சுமார் 3 ஆயிரத்து 500ற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர் இதன் காரணமாகவே அந்த நாட்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
இதேவேளை, மலேசியாவில் எதிர்வரும் இரு வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment