Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இந்தியர்கள் பெருந்தொகையாக இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சி! தடுத்து நிறுத்திய கடற்படை!!

இந்தியர்கள் பெருந்தொகையாக இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சி! தடுத்து நிறுத்திய கடற்படை!!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சித்த இந்திய பிரஜைகளை இலங்கை கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது.
பதினொரு இந்திய படகுகளில் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்த 86 இந்தியப் பிரஜைகளை மீளவும் திருப்பி அனுப்ப இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பை அடுத்தே, இந்திய படகுகளை திருப்பி அனுப்ப முடிந்ததாக கடற்படை தெரிவிக்கின்றது.

இந்த விடயம் குறித்து இந்திய பாதுகாப்பு பிரிவிற்கும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் கடற்படை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில், இந்திய பிரஜைகள் இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சிக்கின்றமையினால், இலங்கையிலும் கொவிட் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டை சூழ கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

 

 

Leave a comment