Homeசெய்திகள்இலங்கை செய்திகள்ஈ.பி.டி.பி உட்கட்சி மோதல் எதிரொலி, பதவிகள் பறிப்பு! டக்ளஸ் அதிரடி!!

ஈ.பி.டி.பி உட்கட்சி மோதல் எதிரொலி, பதவிகள் பறிப்பு! டக்ளஸ் அதிரடி!!

ஈ.பி.டி.பி உட்கட்சி மோதல் எதிரொலி, பதவிகள் பறிப்பு! டக்ளஸ் அதிரடி!!

வவுனியாவில் கடந்த வாரம் ஈ.பி.டி.பி கட்சியினருக்கிடையில் நடைபெற்ற கைகலப்பில், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஈ.பி.டி.பி கட்சியின் இளைஞரணி தலைவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அக்கட்சியின் நிர்வாக செயலாளர் படுகாயமடைந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் இருவரை கைது செய்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் (02) வவுனியாவிற்கு வருகை தந்திருந்த ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கைகலப்பில் ஈடுபட்ட இரண்டு தரப்பு நபர்களையும் கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் நீக்கி கட்சி ரீதியிலான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

 

 

 

Leave a comment