Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் 70 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது!!

இலங்கையில் 70 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது!!

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 கர்ப்பிணித் தாய்மார்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமுதாய சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று (02) வரையில், கொவிட்-19 தொற்று உறுதியான 70 கர்ப்பிணி தாய்மார்கள் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் முடியுமானளவு தமது பயணங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிறந்து ஒரு மாதம் முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வீடுகளில் இருப்பார்களாயின் அவர்களுக்கு அருகில் குழந்தைகளை அனுமதிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதேவேளை, கொவிட்-19 தொற்று உறுதியானவர் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படாவிட்டால், பொதுமக்கள் அதுகுறித்து 1906 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment