Homeசெய்திகள்இந்திய செய்திகள்செல்வந்தர்கள் பாலிவூட் நடிகர்கள் இந்தியாவை விட்டு தப்பியோட்டம்!!

செல்வந்தர்கள் பாலிவூட் நடிகர்கள் இந்தியாவை விட்டு தப்பியோட்டம்!!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக அதிகரித்துள்ள பின்னணியில், அந்த நாட்டிலுள்ள செல்வந்தர்கள் தமது குடும்பத்தாருடன் தனி விமானங்களில் இந்தியாவை விட்டு தப்பித்து வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவிவரும் ஒக்சிஜன் தட்டுபாடு மற்றும் கட்டில் தட்டுபாடு உள்ளிட்ட காரணங்களினால், பாரிய நிதியை செலவிட்டு, அந்த நாட்டு செல்வந்தர்கள் வேறு நாடுகளுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிஇ இவர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, பாலிவூட் நடிகர்களும் தனி விமானங்களின் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியிருந்ததுடன், 2500ற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வசதி படைத்தவர்களும், நடிகர்களும் நாட்டை விட்டு தப்பிச் செல்வது அதிர்ச்சி அழிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a comment