Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் நூறு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டது!!

இலங்கையில் நூறு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டது!!

இலங்கையில் நூறு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டது!!

நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொவிட் வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் 7 மாவட்டங்களிலுள்ள 100 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.திருகோணமலை, குருநாகல், களுத்துறை, கம்பஹா, காலி, பொலன்னறுவை மற்றும் மாத்தளை ஆகிய 7 மாவட்டங்களிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 100 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், 87 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி பொலிஸ் பிரிவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை மாவட்டத்தின் மீகஹதென்ன பொலிஸ் பிரிவின், மிரிஸ்வத்தை, பெலவத்தை வடக்கு, பெலவத்தை கிழக்கு மற்றும் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் அதிகாரிகொட ஆகுய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.மேலும்இ திருகோணமலை மாவட்டத்தின் பூம்புகார் கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் பொல்ஹேன, ஹீரலுகெதர, களுவக்கல, அஸ்வென்தென்ன கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
காலி மாவட்டத்தின் ரத்கம பொலிஸ் பிரிவின் இம்புல்கொட மற்றும் கடுதம்பே ஆகிய பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை பொலிஸ் பிரிவின் பல்லேகும்புர கிராம உத்தியோகத்தர் பிரிவும், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவின் சிறிகொத கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a comment