Homeசெய்திகள்இலங்கை செய்திகள்ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் கைது!!BREAKING NEWS

ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் கைது!!BREAKING NEWS

ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் கைது!! BREAKING NEWS

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் இன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு ஆதரவு வழங்கியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

Leave a comment